நடிகர் விவேக்கின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு தருகின்றது என்று எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக்கின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. லட்சக்கணக்கான மரங்களுக்கு உயிர் கொடுத்தவர். சிறந்த தேசபக்தர். இயற்கை ஆர்வலர். அவரின் இழப்பு தேசத்திற்கு மட்டுமல்லாது எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய ஈசனை பிரார்த்திக்கிறேன் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.