மறைந்த விவேக் முன்னணி நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனது திறமையான காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சின்ன கலைவாணர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை உலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த விவேக் கமலஹாசனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இருவரும் சேர்ந்து நடிக்க சில பட வாய்ப்புகள் கிடைத்தும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இவர்கள் இதுவரை ஒன்றாக நடிக்கவில்லை. மேலும் மறைந்த விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.