சென்னை விருகம்பாக்கம் வீட்டிலிருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் வீட்டிலிருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. விருகம்பாக்கம் வீட்டில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. மேலும் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் திரை உலக பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.