நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை விருகம்பாக்கம் இல்லத்திலிருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் மறைந்த நடிகர் விவேக் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். கையில் மரக்கன்றுகளை இயந்திர ரசிகர்கள் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு. காவல்துறை மரியாதையுடன் ஊர்வலம் தொடங்கியது.78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்படும்.