இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த மார்ச் 23ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஆனால் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆகையால் இப்படத்தினை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது. இருப்பினும் திரையரங்குகளில்
50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தியேட்டர்களில் ரசிகர்களின் வரவேற்பு எதிர்பார்த்தபடி இருக்குமா என்று படக்குழுவினர் சந்தித்து வருகின்றனர்.
இதில் டாக்டர் படத்தின் படக்குழுவினருக்கு மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், முன்னணி நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படமும் டாக்டர் படம் வெளியாகும் தேதியிலேயே வெளியாக உள்ளது. இப்படி இரண்டு முன்னணி நடிகர்களின் படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தற்போது உள்ள சூல்நிலையில் வசூலில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.