தேனியில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் நுங்கினை அதிகமாக விரும்பி வாங்குகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் தேனியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கு கூட தயங்குகிறார்கள். இதனையடுத்து அவர்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருட்களான நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
மேலும் மோர், இளநீர் முதலானவற்றையும் பருகி வருகின்றனர்ம் இதற்கிடையே கம்பத்திலிருக்கும் பாரதிதிடல், சாலை பிரிவு உட்பட பல்வேறு பகுதிகளில் நுங்கின் விற்பனை அதிகமாக உள்ளது. இதனால் நுங்கு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.