Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? விடுதியில் பார்த்த அதிர்ச்சி சம்பவம்… கதறி அழுத தாயார்…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் தொகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெண்கள் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் சண்முகப்பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சண்முகப்பிரியா திடீரென பெண்கள் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |