புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்களை ஏற்றி சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மின்கமபத்தில் மோதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பசனகால் பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுக்கோட்டையிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு இலுப்பூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் பாரதிராஜாவுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். மின்கம்பங்கள் மட்டும் லாரியில் சிக்கி கொண்டது. இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் மின்சாரம் நிறுத்த உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து பாரதிராஜா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பங்களை சரி செய்துள்ளனர்.