Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறையில் கேட்ட அலறல் சத்தம்…. பங்க் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெட்ரோல் வாங்கி விட்டு அதே இடத்திலேயே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு திருத்தங்கல் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் சென்றுள்ளார். அவர் தான் கொண்டு சென்ற காலி பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெட்ரோல் பாட்டிலுடன் பங்க் கழிப்பறைக்கு சென்று கண்ணன் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயம் கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வினோத்குமார் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து விட்டார்.

இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் இணைந்து கண்ணனையும், லேசான காயமடைந்த வினோத்குமாரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதே பங்க்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |