நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு பல்வேறு அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் இந்த கூட்டம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
மேலும் கொரோனா பரவல், தடுப்பூசி பயன்பாடு ஆகியவை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா? அல்லது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவாரா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது.