Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் தப்பிக்கலாம்… மருத்துவ நிபுணர்கள்…!!!

கொரோனா தடுப்பூசி போட்டபின் 2 முதல் 4 வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரு வருட காலமாக கொரோனா நோய்தொற்று பரவி வந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் பிரபல மருத்துவ நிபுணர்கள் செய்தி குறிப்பில் கூறியுள்ளனர். அதில் கொரோனா இரண்டாவது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா நோய் தொற்றிலிருந்து தப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.

தடுப்பூசி போடாமல் இருந்தால் கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்து வரும் நிலைமை ஏற்படலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பை குறைத்து உயிரிழப்புகளை விரைவில் குறைக்க முடியும்.

அதன்பின் கொரோனா தடுப்பு ஊசி தவணை முறையில் 2 முறை போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட 2முதல் 4 வாரங்களுக்குப் பிறகுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக உண்டாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் தாமதிக்காமல், தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |