Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜெட் வேகத்தில் சென்ற மர்ம நபர்கள்….. வெறும் கையுடன் வீட்டிற்கு சென்ற பெண்… வலை வீசி தேடும் போலீசார்….!!

சேலம் மாவட்டத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயா அப்பகுதியிலுள்ள வங்கிக்கு சென்று 30,000 பணம் எடுத்து கொண்டு வங்கிக்கு வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் நின்ற ஆட்டோவில் ஏற முயன்ற போது அந்த வழியாக தலையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்  விஜயாவிடமிருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விஜயாவிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |