Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நரபலி தான் கொடுத்தாங்களா…? பொதுமக்களின் பதற்றம்… விருதுநகரில் பரபரப்பு…!!

பெண் குழந்தையை நரபலி கொடுத்துள்ளதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடக்குபட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் 100 நாள் வேலைக்கு சுடுகாடு வழியாக சென்றுள்ளனர். அந்த சமயம் சுடுகாட்டில் பெண்குழந்தை ஒன்று எரிந்து கிடப்பதாகவும், அதன் பக்கத்தில் தேங்காய், எலுமிச்சம் பழம் போன்ற பூஜை பொருட்கள் கிடப்பதாகவும் கூறியுள்ளனர்.

அதாவது குழந்தையை நரபலி கொடுத்து உள்ளனர் என்ற வதந்தி பரவியதால் ஒவ்வொருவரும் தங்கள் உறவினர் வீட்டிலுள்ள பெண் குழந்தைகள் காணாமல் சென்று உள்ளனரா என விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பரளச்சி காவல்துறையினர் சுடுகாட்டுக்கு சென்று பார்வையிட்ட போது யாரோ சிலர் சுடுகாட்டில் சேவலை அறுத்து பரிகார பூஜை செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |