மேற்கு வங்காள மாநிலத்தில் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 294 தொகுதிகள் 8 கட்டங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. ஐந்தாம் கட்ட தேர்தலில் 319 வேட்பாளர்கள் போட்டியில் பங்கேற்று போட்டியிடுகின்றனர்.
5-ம் கட்ட தேர்தலுக்காக 15 ஆயிரத்து 759 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
4-ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவில் பாதுகாப்பு படை வீரர்களை மீறி அதிகளவில் கலவரம் ஏற்பட்டதால் இந்த முறை தேர்தல் பிரசாரம் ஒரு நாளுக்கு முன் கூட்டியே முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதன்படி அங்கு 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அனைத்தும் புதன்கிழமை மாலை 7 மணி வரை முடிவடைந்துள்ளது. மேற்குவங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணி ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இரவு 7 மணியிலிருந்து காலை 10 மணி வரை அனுமதி இல்லை எனவும் வாக்குப்பதிவுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து 6-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 22ம் தேதியும், 7-ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26-ம் தேதியும், இறுதியாக எட்டாம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்காள தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே இரண்டாம் தேதி என்ன பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும். இங்கு வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் ஏற்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.