Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடரும் பாலியல் பலாத்காரம்…. ஆசை வார்த்தையை நம்பிய சிறுமி…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்டத்தில் சிவதாபுரம் பகுதியிலுள்ள சகோதரி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுக்குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது சிவதாபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுப்ரமணியை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்ததற்க்காக காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்துள்ளனர். மேலும் சுப்பிரமணியிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்

Categories

Tech |