Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது எத்தனை நாட்கள்…? மூடப்பட்ட செஞ்சிகொட்டை கேட்… மத்திய அரசின் உத்தரவு…!!

மத்திய அரசின் உத்தரவின் படி செஞ்சிக் கோட்டையின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எனவே மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவுச் சின்னங்களை மே மாதம் 15ஆம் தேதி வரை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் செஞ்சி கோட்டைக்கு செல்லும் நுழைவு வாயில் கேட் மூடப்பட்டதை அறியாத சுற்றுலா பயணிகள் செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

Categories

Tech |