Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதர்களை வெளியேற்றிய ரஷ்ய அரசு…. ரஷ்யாவின் அதிரடி முடிவு….!!!

அமெரிக்கா ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதிதற்காகஅமெரிக்க தூதர்களை நாட்டை விட்டு ரஷ்ய அரசு வெளியேற்றியுள்ளது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிருந்து மோதல் ஏற்பட்டு வந்தது. அதாவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் முறையின்றி தலையிட்டதற்காகவும் மற்றும் அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் தொடர்ந்து ரஷ்யாவின் மீது அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் ரஷ்யாவை  சேர்ந்த 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பெரும்பான்மையான பொருளாதார தடையை விதித்து உத்தர விட்டது. மேலும் இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கும் ரஷ்யா தூதரக அதிகாரிகள் 10 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத ரஷ்யா அமெரிக்காவின் மீது கடும் கண்டனம் தெரிவித்து.

இதற்கான பதிலடியை கூடிய விரைவில் அமெரிக்காவிற்கு கொடுப்போம் என்றும் எச்சரித்ததுள்ளது. அதன் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவுடன் மோதலை விரும்பவில்லை எனவும் அதிபர் புதினை  நேரில் சந்தித்து இதற்கான தீர்வை எடுக்க இருப்பதாகவும் அதுவே இருநாடுகளுக்கும் நன்மையை அளிக்கும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால் இதனை ஏற்காத ரஷ்யா மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் தூதரக அதிகாரிகள் 10 பேரை அதிரடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற்றிவுள்ளது. மட்டுமல்லாமல் அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் 8 பேரின் பெயரை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்து ரஷ்யாவிற்கு வருவதை தடை செய்துள்ளது.

அவர்களில் அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட், மத்திய புலனாய்வு இயக்குனர் கிறிஸ்டோபர் வேரே மற்றும் அமெரிக்க உள்நாட்டு கொள்கை ஆலோசகர் சூசன் ரைஸ் போன்ற அதிகாரிகள் இந்த பட்டியலில் உள்ளார்கள். இவ்வாறு ரஷ்யா பொருளாதார தடை விதித்திதற்கு அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Categories

Tech |