பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் . இதையடுத்து இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவு பிரபலமடைந்துள்ளார். மேலும் காவியா அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ராணி போல் உடை அணிந்து காவியா போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.