சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கு கீழ் குறைந்து விட்டது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பயணிகள் ரயில் சேவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று குறைந்த சில மாதங்களாக பயணிகளில் கோரிக்கையை ஏற்று மறுபடியும் முக்கிய நகரங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கு கீழ் குறைந்து விட்டது. மேலும் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக தினமும் சென்னைக்கு மட்டும் 15 ரயில்கள் இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் காலியாக செல்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.