Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேசி தீர்த்திருக்கலாம்… டாக்டர் செய்யுற வேலையா இது… மருத்துவமனையை முற்றுகையிட்ட டிரைவர்கள்…!!

கால் டாக்சி டிரைவரை டாக்டர் தாக்கியதால் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் 60 அடி சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராம் நகர் வழியாக தனது காரில் இரவு 7 மணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே வழியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வரும் கால் டாக்ஸி டிரைவரான சிவா என்பவரும் காரில் சென்றுள்ளார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக இரண்டு கார்களும் ஒன்றுக்கொன்று மோதியது. இதனையடுத்து சிவா காரை நிறுத்தாமல் சென்றதால் அப்பகுதியில் இருந்தவர்கள் காரை துரத்தி சென்று வழிமறித்து விட்டனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த டாக்டர் சிவாவை தாக்கி அவருடைய காரை பறித்து சென்றுள்ளார்.

அதன்பிறகு சிவா திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அவருக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த 30க்கும் மேற்பட்ட வாடகை கார் டிரைவர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு டிரைவரை தாக்கிய டாக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரைவர்களை சமாதானப்படுத்தி சிவாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |