Categories
தேசிய செய்திகள்

ஏழை குடிமகன்களின் வங்கிக்கணக்கில்…. மாதம் ரூ.6000 செலுத்த வேண்டும் – சோனியாகாந்தி கடிதம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தடுப்பூசிக்கான  வயது வரம்பை 45 லிருந்து 25 வயது ஆக குறைக்க வேண்டும்.

ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான ஏழை குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6000 செலுத்த வேண்டும். தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு உள்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

Categories

Tech |