சேலம் மாவட்டத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த கார்த்திக் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால் பெற்றோர்கள் இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை என்பதால் திருமணமாகாத ஏக்கத்தில் கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கையறையிலுள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.