Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளிடம்… தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்….!!

கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் அதனை கண்காணிக்க 70 தணிக்கையாளர்களை  மாநகராட்சி நியமித்துள்ளது.

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. தலைநகர் மும்பையிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருகின்றது. இந்த நோய் அதிகரிப்பு காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கை பற்றாக்குறையாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி நகரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் 35 தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் மாநகராட்சி நியமித்துள்ளது. இந்த தணிக்கையாளர்களிடம்  நோயாளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார் அளித்தால் அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தனியார் மருத்துவமனைகளில் உள்ள 80 சதவீத படுக்கைகள் மாநகராட்சி மூலம் தான் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றனர். எனவே தனியார் மருத்துவமனைகள் காலியாக உள்ள படுக்கைகள் குறித்து உடனுக்குடன் மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். அதன்பின் 70 தணிக்கையாளர்களையும் இதேபோன்று வழிநடத்த 2 சிறப்பு அதிகாரிகளையும் மாநகராட்சி நியமனம் செய்துள்ளது.

Categories

Tech |