Categories
உலக செய்திகள்

உலக பிரச்சனையான காஷ்மீர் விவகாரம்… இந்தியாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு..!!

காஷ்மீர்  விவாகரம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவிற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர்.

Image result for india vs china

மேலும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், காஷ்மீரில் உள்ள லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்தார். இதற்கு இந்திய மக்களிடமட்டுமல்லாமல் உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உதாரணமாக லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக  அறிவித்த இந்தியாவின் முடிவுக்கு சீன தற்பொழுது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதற்கு பதிலத்த இந்திய வெளியுறவுதுறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |