Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை என்னால தாங்க முடியல..! வியாபாரி எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் பழக்கடை வியாபாரி குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பெருமாள் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் (41) என்ற மகன் இருந்தார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரேம்குமார் மனைவி மனோரஞ்சனி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |