கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றால் ,ஒரு வருடத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திருவிழா ,4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் . இதற்கு முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்பட்டதால் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன் பிறகு தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகளை ,பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனால் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பான் மற்றும் டோக்கியோவில் ,தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற இருந்த , இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம், என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழுவினரின் தலைவரான ஷிகோ ஹசி மோட்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறுகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு, பல தடைகள் ஏற்பட்டாலும் ,போட்டியை ரத்து செய்வதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.