திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே இருந்து அவதிப்பட்டுகின்றனர்.
இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதில் திடீரென்று பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு உட்பட பல பகுதியில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு குளுமையான சூழ்நிலை உருவானது. இதனையடுத்து அந்த சூழ்நிலையால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.