Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க மேல நடவடிக்கை எடுங்க…. கறுப்புக்கொடி கட்டி போராட்டம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் திரைப்பட நடிகரான யோகி பாபுவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான யோகி பாபுவின் மீதும் சாதி வன்கொடுமை சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாட்டின் மருத்துவர் சமூக நல சங்கமும், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாகவும் மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலிருக்கும் சலூன் கடையில் கருப்புக் கொடியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது தமிழ் திரையுலக நடிகரான நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படத்தில் முடித்திருத்துவோரை இழிவுப்படுத்துகின்ற காட்சிகள் அமைந்ததால் அவர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலத்தின் பிரதிநிதிகளான முத்துக்கருப்பன் மற்றும் பாண்டி கண்ணன் தலைமை தாங்கியதோடு மட்டுமல்லாமல் சில முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |