65 வயதான மாமனார் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பாபர் பகுதியில் ஒருவர் ஏஎன்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இதை அடுத்து அவருடன் 65 வயதாகும் மாமனாரும் வசித்து வருகிறார். அந்த மாமனாருக்கு மருமகளை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. இதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாமனார் கடந்த வாரம் மகன் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் மருமகளை கிச்சனில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் கத்தி கூச்சல் போடவே அவரது மகன் ஓடி வந்து தனது தாயை அந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது மாமனார் மீது மருமகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.