பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர மாநிலங்கள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு , குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உச்ஹல் கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தான் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் உறுதியானது. இதையடுத்து அந்த குழந்தை உயிரிழந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிறந்த 15 நாட்களில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது