டிரண்ட் பவுல்ட் மற்றும் ராகுல் சாஹர்அபாரமான பந்து வீச்சால் , 13 ரன்கள் வித்தியாசத்தில், 2வது வெற்றியை கைப்பற்றிய மும்பை அணி .
14வது ஐ.பி.எல் தொடரின் 9 வது லீக் போட்டியில் , மும்பை இந்தியன்ஸ் – சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் மோதின . இந்த போட்டியானது ,நேற்று சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் , தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தால் ,சன்ரைஸஸ் ஹைதராபாத் பவுலிங்கியில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – குவிண்டன் டிகாக் ஜோடி களமிறங்கினர் . தொடக்கத்திலிருந்தே ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை காட்டினார் .இவர் 2 சிக்சர் ,2 பவுண்டரிகளை அடித்து 32 ரன்களில் வெளியேறினார்.இதன் பின் சூர்யகுமார் யாதவ் 10 ரன்கள் , 4 பவுண்டரிகளை அடித்து விளாசிய ,40 குவிண்டன் டிகாக் ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர் .ஆனால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொல்லார்ட் போராடினர் . இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்தது .
அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 151 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – பேர்ஸ்டோவ் ஜோடி களமிறங்கியது. இருவரின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. இதன்பின் 43 ரன்களை எடுத்து பேர்ஸ்டோவ் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய மனிஷ் பாண்டே 2 ரன்கள் ,கேப்டன் வார்னர் 36 ரன்கள் மற்றும் விராட் சிங் 11 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். ஹைதராபாத் அணிக்கு கடைசி 3 ஓவரில், 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால் 18-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழக்க ,6 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் சிறப்பாக ஆடிய விஜய் சங்கர் 28 ரன்களை எடுத்து வெளியேறினார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து , 137 ரன்கள் குவித்து தோல்வியை சந்தித்து. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.