Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. WhatsApp-ல் பரவும் வைரஸ்…. கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுக்களில் “பிங்க் வாட்ஸ்அப்”என்ற நில ஆபத்தான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. பிங்க் லுக் வாட்ஸ்அப் என்று வரும் லிங்கை தொடவோ, திறக்கவோ, பார்வர்ட் செய்யவும் வேண்டாம். இதனால் பயனாளிகளின் வங்கிக் கணக்கு, பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து டவுன்லோட் செய்த ஆப்களை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |