Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு…. 25 மாநில முதல்வர்களுக்கு…. மிக முக்கிய வலியுறுத்தல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு பல்வேறு அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் தடுப்பூசி தட்டுப்பாடு, இரவு நேர ஊரடங்கு தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கையோ, முழு ஊரடங்கையோ அமல்படுத்த வேண்டா என்று தமிழகம் உள்ளிட்ட 25 மாநில முதலமைச்சர்களுக்கு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |