திருநெல்வேலியில் புகையிலை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளையிலிருக்கும் உடன்குடி சாலைப்பகுதியில் பெட்டிக் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடையினுள் வைத்து தடை செய்யப்பட்ட பொருளான புகையிலையை விற்பனை செய்துள்ளார்.
இதனை திசையன்விளையிலிருக்கும் காவல்துறையினருக்கு தனி நபர் எவரோ ரகசிய தகவல் கொடுத்தனர். இத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பெட்டி கடைக்கு விரைந்து சென்றனர். அதில் அச்சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனால் காவல் துறையினர் பெட்டிக் கடை உரிமையாளரை கைது செய்தனர்.