மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதே போல சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய அரபு எமிரெட்ஸ் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாட்டின் தூதர் அகமது பன்னா இது குறித்து கூறுகையில் , இந்திய அரசு காஷ்மீரில் மேற்கொள்ளும் மாற்றங்கள் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு , அமைதியையும் ஊக்குவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.