புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திரும்ப தராதாதால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராசிபுரம் கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மற்றும் கணேசன் இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சந்தோஷ்குமார் கொடுத்த கடனை திருப்பித் தருமாறு கணேசனிடம் கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து காவல் துறையினர் கொலை செய்ததற்காக சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.