Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போயிட்டு வந்தாள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. கதறிய கணவன்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் சுசீலா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சுசீலா கட்டிட வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சுசீலா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுசீலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுசீலா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |