இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கும்பமேளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் அங்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனையடுத்து கும்பமேளாவிற்கு சென்று டெல்லி திரும்பியவர்கள் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கும்பமேளாவில் கொரோனா பரவியதன் காரணமாக வீட்டில் இருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இன்று முதல் இம்மாத இறுதிவரை கும்பமேளாவிற்கு சென்ற விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.