Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா…? அவரே சொன்ன பதில்…!!!

கமல் படத்தில் விஜய்சேதுபதியின் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல். கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பஹத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார்.ஆனால் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது.

அதன் பிறகு இப்படத்தில் பஹத் பாசில் ஒப்பந்தமான தான் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி முதலில் வில்லனாக நடிக்க என்னை கேட்டார்கள். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா என்பதற்கு இப்போது பதில் சொல்லமுடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றாலும் வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

Categories

Tech |