Categories
மாநில செய்திகள்

முதல்வர் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில்…. புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு…!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவிவருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் பொது வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதித்துள்ளது.

இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

Categories

Tech |