மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் இருக்கும் மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகம் உள்ளன. அங்கு ஏராளமான கொரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை அந்த சுகாதார அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து அலுவலகம் முழுவதும் மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 12 பேர் விரைந்து வந்த தீயணைப்பு பணியை தொடங்கினர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் உயிர் இழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை ஆனால் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளின் நிலைமை என்ன என்பது குறித்து தகவல்கள் இல்லை. இந்த திடீர் தீ விபத்து மின்கசிவு காரணமாக நேரிட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றனர். எனினும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.