Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் எப்படி கட்டுப்படுத்தலாம்..? வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில்… விற்பனையாளர்களுக்கு பயிற்சி..!!

பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் இந்த பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு பரமேஸ்வரன் வரவேற்று பேசினார். இந்த பயிற்சியில் துணை வேளாண்மை இயக்குனர் கதிரேசன், மதுரை வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ், வேளாண்மை அலுவலர் கருணாநிதி மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் பூச்சிகளின் பருவங்கள், பயிர்களைத் தாக்கும் பல்வேறு வகையான பூச்சிகள் குறித்த முழுமையான விவரங்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வகைகள், மாவுப்பூச்சிகள், தத்துப்பூச்சிகள், வெள்ளை ஈ, அசுவினி, இலை உண்ணும் பூச்சிகள், செதில் பூச்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின் சேமிப்பு கிடங்கில் உள்ள பூச்சிகள், மண்ணிலிருந்து தாக்கும் பூச்சிகள், பயிர் வகைகள், குறிப்பாக நெல், கரும்பு சிறுதானியங்கள், பருத்தி, நிலக்கடலை, ஆகியவற்றை தாக்கும் பூச்சிகள், தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Categories

Tech |