Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்…. மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. சென்னைக்கு வர அஞ்சும் மக்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எதிரொலியாக பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சொந்த ஊருக்கு சென்ற அவர்கள் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற அச்சத்தினால் அங்கேயே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |