நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பமேளா சென்று வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மற்றும் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் கும்பமேளா சென்று திரும்பும் மக்கள் தங்களுடைய விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.