சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தன்மைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 475 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர்.