ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
முன்னணி நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். இந்த முதல் படத்திலேயே அவர் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
அதன்பிறகு இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டைக்கோழி திரைப்படமும் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் திருமணத்திற்குப் பின்பு திரையுலக பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்தார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகிற்கு மீராஜாஸ்மின் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி இயக்குனர் சத்தியன் அந்திக்காடு இயக்கும் படத்தில் ஜெயராம்க்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கப்பட உள்ளது என்று தெரியவந்துள்ளது.