நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலுக்கும் மத்தியில் +2 செய்முறைத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருதி பிளஸ்-2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.