Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் விவேக் நினைவாக… ‘பாய்ஸ்’ பட நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்… வைரல் வீடியோ…!!!

மறைந்த காமெடி நடிகர் விவேக் நினைவாக நடிகர் நகுல் ஒரு மாமரத்தை நட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார் . அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை 5:30 மணி அளவில் நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை அதிகாரிகளின் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது .

நடிகர் விவேக் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விவேக்குடன் இணைந்து பாய்ஸ் படத்தில் நடித்த நகுல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘மறைந்த நடிகர் விவேக் சார் நினைவாக ஒரு மாமரத்தை நட்டு அதற்கு மங்கலம் எனப் பெயரிட்டுள்ளேன். எப்போதும் நீங்கள் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள். அனைத்து அழகான நினைவுகளுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |