உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளிலியே அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர், தற்போது வரை உலகம் கண்டிராத அளவிற்கு நோய் பாதிப்பு மிக அதிகமான விகிதத்தை நெருங்குவதற்கான அபாயம் உள்ளது என்று எச்சரித்தார். இந்நிலையில் அவர் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே, தற்போது வரை உலக அளவில் கொரனோ பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 கோடியை தாண்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வருகிறது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் சுமார் 22,30,00 நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவரான Tedros Adhanom, தொற்று எண்ணிக்கைகள் அதிகரிப்பதும், உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பதும் வருத்தமடைய செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம், அதிகமாக தொற்று பரவும் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்ததாக தெரிவித்திருக்கிறது.