புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திருட்டுத் தனமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடமீருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா விற்றதற்க்காக மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.